நீங்கள் பேஸ்புக்கிற்கு அடிமையா?: தெரிந்து கொள்வதற்கான வழி இதோ!
நீங்கள் பேஸ்புக் பாவனையாளரா? அதன் மீதான உங்களது ஆர்வத்தை அளவிடும்
பொருட்டு ஆராய்ச்சியாளர்கள் அளவுகோலொன்றினை உருவாக்கியுள்ளார்கள்.
நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர்.
இதன் பெயர் ‘Bergen Facebook Addiction Scale’ ஆகும்.
சுமார் 400 பேரிடம் மேற்கொண்ட ஆராய்ச்சினையை அடுத்தே இதனை அவர்கள் தயாரித்துள்ளனர்.
அவ் அளவுகோல் இதோ
மேற்காட்டப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் தாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகிவிட்டோமா? என சந்தேகப்படுபவர்கள் எவராக இருந்தாலும் இதில் பெறும் புள்ளிகள் மூலம் தம்மை சுயமாக கணிப்பிட்டுக்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமது ஆராய்ச்சி தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவர்கள் எத்தகைய
அறிகுறிகளைக் கொண்டிருப்பார்களோ அதே போன்ற அறிகுறிகளையே பேஸ்புக்கிற்கு
அடிமையானவர்களும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பெரியோரை விட இளம்வயதினரே பேஸ்புக்கிற்கு அதிகமாக அடிமையாவதாகவும், தாம்
சமூக பாதுகாப்பற்றதாக இருக்கின்றோம் என உணர்பவர்கள் பேஸ்புக்கினை அதிகம்
உபயோகிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பெண்கள் அதிகம் பேஸ்புக்கிற்கு அடிமையாவதாகவும், இப்பழக்கத்தினால்
தூங்கும் நேரம்,காலையில் கண்விழிக்கும் நேரம் என அனைத்தும்
பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். _
No comments:
Post a Comment