Friday, June 15, 2012


 2 வயது முதல் 3 வயது வரை

நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பது பொருள் அல்ல. நாம் தான் நம் குழந்தைகளுக்குத் தேவையான சத்தான உணவு முறைகளை கற்றுத் தர வேண்டும்.

அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:-
  • பருப்பு
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • கொழுப்பு சத்து நிறைந்த பால், வெண்ணை, தயிர் முதலியவை
  • உள்ளுத்த வடை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சேர்த்தல் நலம்
  • 5 வயது வரை மற்ற எண்ணைகளுக்கு பதில் தேங்காய் எண்ணை சேர்த்து குழந்தைகள்ளுக்கு என்று தனியே சமைப்பது நன்று
  • குழந்தைகளுக்கு கசப்பு, புளிப்பு காரம் என்ற வேறுபாடுகள் கிடையாது. அனைத்தும் ஒவ்வொரு சுவை. ஆகவே பாகற்காய் கசப்பு அது வேண்டாம் என்று நாமே அதை ஒதுக்காமல் அவற்ற்றை நன்கு வறுத்து குறைந்த கசப்புடனோ, கசப்புத் தெரியாத வண்ணமோ சமைத்துக் கொடுத்து பழக்கி விட்டால் பின்னாளில் அவை நமைப் போல் பகற்கையை ஒதுக்காமல் உண்ண பழகிக்கொள்ளும்.
  • ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் நான் பாகற்காயைச் சொன்னேன். இதே போல் அனைத்து காய்கறிகள், பழங்களையும் ஒதுக்காமல் நாம் இந்த வயதில் பழக்கிவிட்டால் பின்னாளில் என் குழந்தைக்கு இது பிடிக்காது என்று எந்தக் காய்கறியையும் சொல்லத் தேவையில்லை.
  • குழந்தைகள் உண்ணாமல் அடம் பிடிப்பது உனாவின் ருசி பிடிக்கவில்லை என்று மட்டும் நாம் கருதி விடக் கூடாது. அவைகளுக்கு தம்மை சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தும் புதியவை. அவற்ற்றை அறிந்து கொள்ளும் ஆவலினாலும், விளையாட்டுத் தனத்தினாலும் தான் அதிகம் உண்ண மறுக்கின்றன. ஆகவே உணவு கொடுக்கும் போது புது புதுக் கதைகள் கூறி கொண்டே உணவு கொடுங்கள். கண்டிப்பாக அனைத்துக் குழந்தையும் அனைத்தையும் சாப்பிடும்.
அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாதவை:-
  • கடைகளில் விற்கும் pizza முதலிய Junk foods 
  • சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க காற்று(GAS ) நிரப்பிய packed items 
  • மிகவும் பொறித்த மொரு மொரு Items .
  • அதிக கிழங்கு வகைகள்
  • காபி, டீ முதலியவை
  • முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகள்.
  • அதிக biscuits
  • அதிக chochlates
  • திரும்ப திரும்ப சுட வைத்த பால்
  • கசடு நிறைத்த எண்ணை(அடிக்கடி பயன்படுத்திய எண்ணை
மேற்கூறியபடி தேவையான சத்தான உணவைக் கொடுப்பதுடன் தரையில் சிந்திய உணவை வாயில் வைக்காமல் பார்த்துக் கொண்டால் குழந்தை நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வளரும்.

இதனுடன் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் நாம் உதவி செய்துவிட்டால் நம் குழந்தை தான் எல்லாவற்றிலும் முதல் என்று நாம் மார்தட்டி கொள்ளலாம்.

No comments: