மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
மேக் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை அந்த கம்ப்யூட்டர் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதைக் காட்டிலும் அது எப்படி நம்மை மகிழ்விக்கிறது என்று உணர்வதே ஒரு பெரிய விஷயம். நீங்கள் முற்றிலும் கம்ப்யூட்டருக்குப் தியவர் என்றாலும் மேக் கம்ப்யூட்டரை ஒன்றிரண்டு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம். வெறும் கருப்பு திரையில் எழுத்துக்கள் மட்டுமே டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர் அச்சு போல தோன்றி இயங்கியது டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
இதன் பின் வந்த விண்டோஸ் இயக்கம் கிராபிக்ஸ் பயன்படுத்தி கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அடியோடு தலைகீழாகப் புரட்டி போட்டது. ஆனால் எந்தவித ஆரவாரமும் இன்றி விண்டோஸ் வருவதற்கு முன்பே கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் தொகுப்பினை மிக அழகாகப் பயன்படுத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் மேக். 1984ல் இது முதலில் அறிமுகப்படுத்திய போது சிஸ்டம் சாப்ட்வேர் என்றுதான் அழைக்கப்பட்டது. இதனைத் தயாரித்து வழங்கிய ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே இது குறித்து அவ்வளவாக விளம்பரப்படுத்தாமலும் தகவல்களை அளிக்காமலும் இருந்தது. இதற்குக் காரணம் டாஸ் சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில் மேக் சிஸ்டம் மிக மிக எளியதாகவும் பயன்படுத்து பவர்களின் துணைவனாகவும் பயனாளர்களால் உணரப்பட வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் விரும்பியது. இந்த சிஸ்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு தற் போது மேக் ஓ.எஸ். டென் (Mac OS X) பயன்பாட்டில் உள்ளது. இது பவர் பி.சி. மற்றும் இன்டெல் பிராசசர்களில் இயங்கக் கூடியது. அனைத்து மேக் இன் டோஷ் கம்ப்யூட்டர்களில் இது பதிக்கப்பட்டு தரப்படுகிறது. வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இனி மேக் ஓ.எஸ். டென் தரும் பல வசதிகளைப் பார்க்கலாம்.
1.மேக் சிஸ்டம் இன்றைக்கு கம்ப்யூட்டரை மக்கள் எப்படி வீடுகளிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்துகிறார்களோ அதன்படி அமைக்கப்பட்டுள் ளது. எந்த இடத்திலும் வயர்லெஸ் நெட்வொர்க் மற்றும் நெட்வொர்க் மூலமாக இன்டர்நெட் இணைப்பு பெற முடியும்.
2. சில சாதனங்களை இணைக்க கான்பிகர் செய்திடும் நிமிடங்கள் அல்லது பல மணித்துளிகளை இதில் செலவழிக்க வேண்டியதில்லை. டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், எக்ஸ்டெர்னல் டிரைவ் என எதனையும் உடனே இந்த சிஸ்டம் ஏற்றுக் கொள்கிறது.
3. தற்போது வடிவமைக்கப்பட்டு நவீன தொழில் நுட்பத்துடன் கிடைக்கும் இன்டெல் பிராசசர்களுடன் விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே செய்யக் கூடிய செயல்களை ஒரு மேக் அதிசயத்தக்க வேகத்தில் செய்து முடிக்கும்.
4. இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் கேமரா இணைந்தே பதிக்கப் பட்டு வருகிறது. ஆனால் மேக் கம்ப்யூட்டர்களில் மட்டுமே அதில் உள்ள ஐ–சேட் என்னும் சாப்ட்வேர் தொகுப்பின் மூலம் நான்கு வழி வீடியோ அரட்டை வசதியினைத் தருகிறது. உங்களுடைய திரையை உலகில் உள்ள எவருடனும் பகிர்ந்து கொண்டு இயங்கலாம்.
5. மேக் சிஸ்டம் தானாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ளும். ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர் தொகுப்புகளை இணையத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தத் தரும்.
6. மற்ற சிஸ்டங்களைப் போல மேக் வைரஸ்களாலும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாலும் பாதிக்கப்படுவதில்லை. எனவே எந்த தடையும் இல்லாமல் நீங்கள் கம்ப்யூட்டரில் செயலாற்றலாம். மேக் தரும் பெற்றோர்களுக்கான (parental controls) கட்டுப்பாடு வசதி மூலம் உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இணையத்தில் பிரவுஸ் செய்திடலாம்.
7. விண்டோஸில் இயங்குபவர்கள் மேக் சிஸ்டத்திற்கு மாற விரும்பினால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி எம்.எஸ்.ஆபீஸ் பைல்களை என்ன செய்வது? மேக் சிஸ்டம் அவற்றை ஏற்றுக் கொள்ளுமா? ஆம், மேக் சிஸ்டத்திற்கான எம்.எஸ்.ஆபீஸ் உள்ளது. மேக் சிஸ்டத்தில் உருவாக்கப்படும் வேர்ட், பவர்பாய்ண்ட் மற்றும் எக்ஸெல் பைல்களை விண்டோஸிலும் இயக்கலாம்.
மற்ற பிரபலமான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும் மேக் சிஸ்டத்திற்கென உள்ளன. இல்லை, மேக் சிஸ்டத்தில் விண்டோஸ் மட்டுமே நான் இயக்க வேண்டும் என விரும்பினால் தற்போது வரும் ஒவ்வொரு புதிய மேக் கம்ப்யூட்டருடன் பூட் கேம்ப் என்ற சாப்ட்வேர் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் மேக் கம்ப்யூட்டரை விண்டோஸ் உள்ள கம்ப்யூட்டர் போல இயக்கலாம். இரண்டையும் அருகருகே இயக்க விரும்பினால் பேரலல்ஸ் டெஸ்க் டாப் அல்லது வி.எம். வேர் ப்யூஷன் என்ற சாப்ட்வேர் தொகுப்பை வாங்கிப் பயன்படுத்தலாம்.
8. விண்டோஸ் நெட் வொர்க்குடன் எந்த மேக் கம்ப் யூட்டரும் இணைந்து செயல் படும். நெட்வொர்க் கில் உள்ள எந்த கம்ப்யூட்டருடனும் பைல்களை பங்கிட்டுக் கொள்ளலாம். இணையத்தில் பிரவுஸ் செய்திடலாம். இமெயில் அனுப்பலாம்; பெறலாம்.
9. அனைத்து மேக் கம்ப்யூட்டர்களும் வை–பி இணைப்பு கொண்டுள்ளன. எனவே ஓரிடத்தில் வை–பி இணைப்பு இருந்தால் அதனை உடனே மேக் கம்ப்யூட்டர் காட்டும். இணைப்பும் பெறலாம்.
10. நீங்கள் மேக் அல்லாத ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரை வாங்குகையில் ஹார்ட் வேர் சாதனங்கள் ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்; சாப்ட்வேர் தொகுப்புகள் இன்னொரு நிறுவனத்திடமிருந்து வந்திருக்கும். ஆனால் மேக் கம்ப்யூட்டர்களைத் தரும் ஆப்பிள் நிறுவனம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இரண்டையும் தானே தயாரித்து வழங்குகிறது. அதனால் இரண்டும் மேட் பார் ஈச் அதர் ஜோடி போல திறனுடன் இயங்குகின்றன. இதனால் மேக் கிராஷ் ஆவதும் ப்ரீஸ் ஆவதும் கிடையாது. மேக் சிஸ்டம் வைரஸ்களை கடுமையாக எதிர்த்து நிற்பதால் நீங்கள் எந்த தயக்கமும் இன்றி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம்.
11. மேக் கம்ப்யூட்டரைப் பழகுவது எளிதா? இந்த கேள்விக்கு என்ன பதிலைத் தரலாம்? ஆம், எளிதுதான். மேக் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை அந்த கம்ப்யூட்டர் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதைக் காட்டிலும் அது எப்படி நம்மை மகிழ்விக்கிறது என்று உணர்வதே ஒரு பெரிய விஷயம். நீங்கள் முற்றிலும் கம்ப்யூட்டருக்குப் புதியவர் என்றாலும் மேக் கம்ப்யூட்டரை ஒன்றிரண்டு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம்.
12. மேக் கம்ப்யூட்டர் விண்டோஸில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் விலை கூடுதலாக இருக்குமா? மேக் கம்ப்யூட்டருடன் வரும் கூடுதல் சாப்ட்வேர் தொகுப்புகள், பாதுகாப்பு கவசங்கள், எதனையும் இணைத்து இயக்கத் தயாராய் உள்ள சிஸ்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் அப்படி ஒன்றும் விலை கூடுதல் இல்லை.
13. விண்டோஸ் கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து பிரவுசர்களும், (பயர்பாக்ஸ், ஆப்பரா, சீ மங்க்கி, பிளாக் ) மேக் சிஸ்டத்தில் இயங்கும் –– இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தவிர. மேக் சிஸ்டத்திற்கென தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் சபாரி / வெப்கிட் இப்போது பலரால் விரும்பிப் பயன்படுத்தப்படும் நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன.
மேக் கம்ப்யூட்டர் குறித்து அறிந்து கொண்டீர்களா? பழக ஆசையா? ஏன் வாங்கிப் பயன்படுத்தலாம். பின் நிச்சயம் வேறு சிஸ்டத்திற்கு மாற மாட்டீர்கள்.

No comments:
Post a Comment