Friday, June 15, 2012


உடலுறவு - தெரிந்ததும் தெரியாததும்!

செக்ஸ் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதில் பெரும்பாலானவை உண்மையில்லை. தாம்பத்ய உறவின் தேவையை அறிந்து கணவர்தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காதலோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் பற்றிய பழமையான நம்பிக்கைகளையும், உண்மைகளையும் பற்றி விளக்குகின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன்.

நம்பிக்கை: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!

உண்மை: தாம்யத்ய உறவிற்கு சிறிய மார்பகம், பெரிய மார்பகம் என்ற பாகுபாடு இல்லை. வம்சம், உடல்எடை, ஊட்டச்சத்துணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையும்.

நம்பிக்கை: தாம்பத்ய உறவு குறித்த அறிவு இருக்கும் பெண்களுக்கு ஏற்கனவே அதில் முன் அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது..!

உண்மை: தற்போது பெண்கள் அதிகம் படிக்கின்றனர். ஆண்களைப் போல வெளியே செல்கின்றனர். இதனால் அனுபவ அறிவு இல்லாமலேயே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெறமுடியும்!

நம்பிக்கை: திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித்தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்பது!

உண்மை: திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு சாதாரணமாக மெல்லியதாகவோ அல்லது தடிமனாகவோ இருக்கலாம்.

ஹைமனில் இருக்கும் துவாரம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திருக்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல்உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்கலாம்!

இதேபோல் பெண்களிடமும் செக்ஸ் குறித்த சில நம்பிக்கைகள் இருக்கின்றன.

நம்பிக்கை: முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!

உண்மை: முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. பதற்றம், பயம் ஏற்படலாம். அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

நம்பிக்கை: உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ளகுறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!

உண்மை: உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சமஅளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை: வயதாகி விட்டதாலும் மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்களுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசியமில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!

உண்மை: பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில் உடல்உறவு தேவையில்லை என பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு. வயதான காலத்திலும் வளமான உறவை பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

நம்பிக்கை: கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!

உண்மை: ஆண்கள் தான் முதலில் அழைக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள். எனவே பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம்!
Download As PDF

No comments: