புத்தம் புதிய தமிழ் யுனிகோட் எழுதி மற்றும் கன்வெர்ட்டர்
கணினியில்
தமிழ் எழுத நாம் பல்வேறு முறைகளை பயன்படுத்துகிறோம். பிளாக், எடிட்டர்,
Google tamil Input, NHM எழுதி, பாமினி எழுத்துரு போன்ற பல்வேறு முறைகளை
பயன்படுத்தி தமிழில் எழுதி கொண்டிருக்கிறோம். இந்த முறையில் இன்னும் ஒரு
புதிய தமிழ் UNICODE எழுதி அறிமுகப் படுதப்பட்டுள்ளது. இந்த எழுதியில் உள்ள
சிறப்பம்சம் கன்வெர்டரும் இதில் உள்ளது உள்ளது. அதாவது பாமினி, அமுதம்
போன்ற எழுத்துருக்களில் எழுதி அதை யுனிகோடாக மாற்றி கொள்ளும் வசதி இதில்
உள்ளது.
- இந்த வசதியை குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் பெறலாம்.
- தமிழ் யுனிகோட் எழுதி எக்ஸ்டென்சன் மூலம் Roman, பாமினி, தமிழ்நெட்99, அமுதம் ஆகிய விசைப்பலகை அமைப்புகளிலும் தட்டச்சு செய்யும் வசதி உள்ளது.
- இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் இந்த நீட்சியை பயன்படுத்த முடியும்.
- இனி இந்த முறையிலும் தமிழில் டைப் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment