Saturday, June 16, 2012

வின்டோஸ் 8 ஓர் அறிமுகம்..

கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது !


இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றலாம் என்பது மைக்ரோசாஃப்டின் திட்டம். அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை டவுன்லோட் செய்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டார்கள் .ஆனால் அதற்கு முன்னர் உங்கள் கணனி விண்டோஸ் 8 ஐ இயக்குவதற்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை பரிசோதிக்க வேண்டியது முக்கியமாகும்.
விண்டோஸ் 8 இன் உதவிக்குறிப்பில் Windows 8 FAQ வில் பின்வரும் தகமைகள் கொண்ட கணனியில் விண்டோஸ் 8 ஐ நிறுவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 GB RAM
16 GB ஹாட்டிஸ்க் அளவு
1 GHz processor
இவற்றில் விண்டோஸ் 8 இயங்கும் என்ற போதும், 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு குறைந்தது 2GHz Ram தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது நீங்கள் பயன்படுத்தும் கணனியில் dual-boot முறையில் ஹாட்டிஸ்க்கின் மற்றுமொரு பதிப்பில் நிறுவுவதற்கு அல்லது பழைய விண்டோஸ் பதிப்பை மேம்படுத்தப் போகின்றீர்கள் என்றால் default Setup program ஐ தரவிறக்கம் செய்வதே நல்லது.
கவனிக்க – விண்டோஸ் 7 இருந்து விண்டோஸ் 8 ஐ மேம்படுத்தும் போது கணனியில் உள்ள மென்பொருட்களை மட்டுமே மீண்டும் நிறுவ வேண்டும்.
ஆனால் விண்டோஸ் XP அல்லது விஸ்டா மேல் விண்டோஸ் 8 நிறுவ முன்னர் மென்பொருட்கள் மற்றும் உங்கள் கோப்புக்கள் அழிந்துவிடும். எனவே கோப்புக்களை பேக்கப் செய்து சேமித்து விட்டு நிறுவத் தொடங்குங்கள்.
வின்டோஸ் 8 ஐப் பொறுத்தவரை இது எல்லாவிதமான கம்ப்யூட்டர்களிலும் பொருந்தும் என்பது புதுமையான விஷயம். தொழில் நுட்ப அடிப்படையில் பேசும்போது வின்டோஸ் செயலிகள் எல்லாமே எக்ஸ்.86 எனும் பிராசசர்களுக்காகவே உருவாகும். அதனால் பிற இடங்களில் இதை நிறுவ முடியாத சூழல் இருந்தது. இந்த செயலி முதன் முறையாக அந்தக் கட்டுப்பாட்டை உடைத்து ஏ.ஆர்.எம் கட்டமைப்புக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.
பாதுகாப்பு விஷயங்களைப் பலப்படுத்தவும், எளிமையாக கணினியில் உள் நுழையவும் படம் சார்ந்த பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது வின்டோஸ் 8. இதில் பயனர் நீளமான ஒரு கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. அடிக்கடி அதை மாற்றி, என்னத்த மாற்றினோம் எனவும் குழம்பவும் தேவையில்லை. படத்தைக் காட்டி உள் நுழையலாம் ! இரண்டாம் கட்ட பாதுகாப்பாக வார்த்தைகளைக் கொண்டும் பாஸ்வேர்ட் அமைக்கலாம்
வின்டோஸ் செயலிகளில் இருக்கும் பலவீனங்களில் ஒன்று அதன் “ரீஸ்டார்ட்” நேரம். சில வேளைகளில் கணினியை இயக்கிவிட்டு ஒரு காபி குடித்து விட்டு வந்தால் தான் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி இருக்கும். இது ஒரு பரவலான குறையாகவே இருந்து வருகிறது. வின்டோஸ் 8 அந்த சிக்கலையும் புதுமையான முறையில் சரி செய்யும் என்கிறார்கள். ரிஃப்ரஷ், ரீசெட் எனும் இரண்டு புது கான்சப்ட் மூலமாக இந்த சிக்கலைச் சரிசெய்திருக்கிறோம் என்கின்றனர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினர்.
இன்றைய நவீன உலகில் எல்லாமே தொடு திரை தானே. குறிப்பாக மொபைல் புரட்சி வந்தபின் மக்களெல்லாம் போனில் தொட்டுத் தொட்டு விஷயங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கணினியைப் பொறுத்தவரை இன்னும் கீ-போர்ட் முக்கியமான அம்சமாகவே இருக்கிறது. திரையில் தொட்டால் செயல்படுவது போல செயலிகள் இல்லை. அந்தக் குறையை வின்டோஸ் 8 போக்கும் ! இது தொடு திரை வசதியுடைய டேப்லெட்களுக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.
இன்னொரு அட்டகாசமான விஷயம்,
“வின்டோஸ் டு கோ”

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு “டாஸ்” செயலி இருந்த காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் தான் அந்த செயலிக்கான கோப்புகள் இருக்கும். அதைப் போட்டுதான் கணினியை இயக்க முடியும்.
அதன் பின் பிளாப்பிகளெல்லாம் அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டன. இந்த வின்டோஸ் டு கோ ஒரு புதுமையான மறுபிறவி எனலாம். அதாவது, வின்டோஸ் 8 செயலி முழுவதும் ஒரு 32 ஜிபி அளவுள்ள பென்டிரைவில் இருக்கும். அதை கணினியில் சொருகிவிட்டால் போதும். அங்கிருந்தே செயலி செயல்படத் துவங்கும். உங்கள் கம்ப்யூட்டலில் “இன்ஸ்டால்” செய்யத் தேவையில்லை ! புதுமையாய் இருக்கிறது இல்லையா ?

வின்டோஸ் செயலி பொதுவாகவே வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் பிரவுசரைத் தான் முன்மொழியும். காரணம், அதுவும் மைக்ரோசாஃப் தயாரிப்பு என்பது தான். ஆனால் பயனர்களுடைய விருப்பம் மாறுபடும். சிலர் மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசரை விரும்புவார்கள். வேறு சிலருக்கு கூளிள் குரோம் வசதியாக இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு வேறு பிரவுசர்களை எந்த சிக்கலுமில்லாமல் நிறுவிக் கொள்ளவும் வின்டோஸ் 8 அனுமதிக்கிறது !
ஆனாலும் வின்டோஸ் 8க்காகவே மைக்ரோசாஃப்ட் களமிறக்கும் பிரவுசர் வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் “மெட்ரோ” 10 ! தொடு திரை வசதியுடன் கூடிய முதல் பிரவுசர் இது தான். இது வின்டோஸ் 8ல் மிகவும் அற்புதமாகச் செயல்படுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வின்டோஸ் செயலி என்றதும் “ஸ்டார்ட் பட்டன்” உங்களுக்கு மனதில் நிழலாடும் ! ஸ்டார்ட் பட்டன் இல்லாவிட்டால் கொஞ்சம் தடுமாறிப் போவோம் இல்லையா ? இந்த வின்டோஸ் 8ல் ஸ்டார்ட் பட்டனே கிடையாது.
வின்டோஸ் 8ல் ஸ்டார்ட் பட்டன்…
இது திரையில் ஆப்ளிகேஷன்களை வரிசைப்படுத்தி வைக்கும். அங்கிருந்து தேவையானவற்றை இயக்கவோ, முடிக்கவோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். புதுமையான மாற்றம் என்பதால் காலம் காலமாக ஸ்டார்ட் பட்டன் கிளிக்கிப் பழகிய கைகளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் நேரிடலாம்.!
தொடுதிரை வசதி மெட்ரோ யூஐ வசதியின் மூலம் சாத்தியமாகி இருப்பதால், மவுஸ் பயன்பாடும் கீ போர்ட் பயன்பாடும் வெகுவாகக் குறையும். ஆனாலும் அது முழுமையாக நீக்கபடவில்லை. மவுஸ் தான் வேண்டும் என முரண்டு பிடிக்கும் கைகளுக்கு மவுஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் !
இப்போது பயன்பாட்டில் உள்ள யூ.எஸ்.பி 2 வின் அட்வான்ஸ் வெர்ஷனும் வருகிறது என்பது புதுமை. இந்த செயலியுடன் யூ.எஸ்.பி 3 வருகிறது. இதன் செயல்பாட்டுத் திறன் அதிகமாக இருக்கும்.
கொஞ்ச நாள் தொடர்ந்து வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தினால் அது ரொம்பவே ஸ்லோ ஆகி இம்சைப்படுத்தும் என்பது சர்வதேசக் குற்றச்சாட்டு. அதற்குக் காரணம் தேவையில்லாமல் சேரும் தற்காலிகக் கோப்புகள், நினைவிடக் கோளாறுகள் போன்றவை தான். அதை நிவர்த்தி செய்ய “புஷ் பட்டன் ரீசெட் ஆப்ஷன்” இருக்கிறது.
ஒரு பட்டனை அமுக்கினால் உங்கள் கணினியிலுள்ள வேண்டாத விஷயங்களையெல்லாம் அது அழித்து உங்கள் கணினியை சுறுசுறுப்பாக்கிவிடும். கணினியையே புத்தம் புதிது போல ஆக்க வேண்டுமெனில் அதற்கும் ஒரு தனி ஆப்ஷன் இருக்கிறது. அதை அமுக்கினால், கணினியின் அனைத்து கோப்புகளும் அழிந்து, புதிதாக வின்டோஸ் செயலில் நிறுவப்பட்டு விடும் !
கீழுள்ள இணைப்புக்களில் விண்டோஸ் 8 இன் ஏனைய விபரங்களை அறிந்துகொள்ளலாம்
இப்படி பல்வேறு விதங்களில் வசீகரிக்கும் வின்டோஸ் 8ன் முழுமையான வடிவம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரக் கூடும் என்கின்றனர். எனினும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இன்னும் எந்த தேதியையும் குறிப்பிடவில்லை !
வரட்டும் ! காத்திருப்போம் !





No comments: